அனுஷ்கா நடிப்பில் வெளியான 'பாகமதி' திரைப்படம், 'துர்காவதி' என்ற பெயரில் இந்தியில் ரீமேக் ஆகிறது.
2018-ம் ஆண்டு அனுஷ்கா நடிப்பில் வெளியான படம் 'பாகமதி'. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான இந்தப் படத்தை ஜி.அசோக் இயக்கியிருந்தார். யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தை தமிழில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட்டது.
முழுக்க நாயகியை மையப்படுத்திய இந்தப் படத்தில் அனுஷ்கா நடித்திருந்தார். அவருடன் ஜெயராம், உன்னி முகுந்தன், ஆஷா சரத் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மதி ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்திருந்தார்.
தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் இந்தி ரீமேக் பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்தப் படத்தின் உரிமையை அக்ஷய் குமார் கைப்பற்றி அதன் பணிகளைத் தொடங்கியுள்ளார். தெலுங்கு படத்தை இயக்கிய ஜி.அசோக்கே இந்தியிலும் இயக்கவுள்ளார்.
அனுஷ்கா கதாபாத்திரத்தில் நடிக்க புமி பெட்னேகர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜெயராம், ஆஷா சரத் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் யார் நடிக்கவுள்ளார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்தப் படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஜனவரி இரண்டாம் வாரத்தில் தொடங்கவுள்ள இந்தப் படத்துக்கு 'துர்காவதி' என்று பெயரிட்டுள்ளனர். அக்ஷய் குமார், விக்ரம் மல்கோத்ரா மற்றும் பூஷண் குமார் மூவரும் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.