பாலிவுட்

என்ன மாதிரியான கடின உழைப்பு: பாகுபலி குறித்து ஷாரூக் கான் ஆச்சரியம்

பிடிஐ

எஸ்.எஸ்.ராஜமவுலியின் பிரம்மாண்ட தயாரிப்பான பாகுபலி படத்தை பாலிவுட் நட்சத்திரம் ஷாரூக் கான் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

தன்னுடைய ‘தில்வாலே’ படப்பிடிப்புக்காக பல்கேரியா பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய ஷாரூக் தனது ட்விட்டரில் பாகுபலி படத்தை “பெரிய அகத்தூண்டுதல்” என்று வர்ணித்துள்ளார்.

“பாகுபலி! ஒரு படத்துக்காக என்ன மாதிரியான கடின உழைப்பு; இந்தப் படத்தின் உருவாக்கத்தில் உள்ள அனைவருக்கும் எனக்குள் ஏற்படுத்திய தூண்டுதலுக்காக நன்றிகள். தாவ முயற்சி செய்தால்தான் வானுயரத்தை எட்ட முடியும்” என்று ட்வீட் செய்துள்ளார் ஷாரூக்.

பாகுபலியின் அடுத்த பாகம் 2016-ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT