பாலிவுட்

சித்தார்த் மல்ஹோத்ராவின் 'மர்ஜாவான்' படத்துக்கு வரவேற்பு

செய்திப்பிரிவு

பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா, ரித்தேஷ் தேஷ்முக் ஆகியோர் நடிப்பில் இவ்வாரம் வெளிவந்த 'மர்ஜாவான்' திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.

மிலப் சவாரி இயக்கத்தில் பூஷன் குமார் தயாரிப்பில் 'மர்ஜாவான்' திரைப்படம் வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது. இப்படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா, ரித்தேஷ் தேஷ்முக், தாரா, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்களுக்கு பாலிவுட் ரசிகர்கள் இடையே கடந்த ஒருமாதமாகவே வரவேற்பு இருந்து வந்தது.

இந்நிலையில் கிரைம் த்ரில்லர் கதையை அடித்தளமாக கொண்ட 'மர்ஜாவான்' படத்திற்கும் ரசிகர்களிடம் கணிசமான வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் திரைப்பட விமர்சர்கள் இப்படத்திற்கு கலவையான விமர்சனம் அளித்துள்ளனர்.

சுமார் 2,922 திரையரங்களில் வெளியான 'மர்ஜாவான்' திரைப்படம் முதல் நாளில் 7.03 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

'மர்ஜாவான்' திரைப்படத்தை இயக்கிய மிலப் சவாரி கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ’சத்யமேவ ஜெயதேவ்’ படத்தை இயக்கிவர். இப்படத்தில் ஜான் ஆபிரகாம் கதாநாயகனாக நடித்திருந்தார்.

SCROLL FOR NEXT