கிறிஸ்துமஸ் 2019 விடுமுறைக்கு அக்ஷய் குமார், கரீனா கபூர் நடிப்பில் 'குட் நியூஸ்' திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்தத் திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வியாழக்கிழமை வெளியானது.
இரண்டு கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றுக்கு நடுவில் அக்ஷய் குமாரின் முகம் மாட்டிக்கொண்டிருப்பது போல இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கியாரா அத்வானி, தில்ஜித் தொஸான்ஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த வருடத்தின் மிகப்பெரிய குழப்பம் வருகிறது என போஸ்டரைப் பகிர்ந்துள்ள அக்ஷய் குமார் குறிப்பிட்டுள்ளார். இதே போஸ்டரில் அக்ஷய் குமாருக்குப் பதிலாக தில்ஜித் இடம்பெற்றிருக்கும் வடிவமும் இன்று வெளியாகியுள்ளது.
திருமணமான இரண்டு தம்பதிகளைப் பற்றிய நகைச்சுவைத் திரைப்படம் இது. இதில் அக்ஷய் - கரீனா இருவரும் ஹனி மற்றும் மோனிகா என்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குழந்தை பெற்றுக்கொள்ள இவர்கள் செய்யும் முயற்சியே இந்தப் படத்தின் கதை. ராஜ் மெஹ்தா இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
டிசம்பர் 27 அன்று ’குட் நியூஸ்’ வெளியாகவுள்ளது.