திரையுலகில் 50 வருடங்களைப் பூர்த்தி செய்த அமிதாப் பச்சனுக்கு இயக்குநர் கரண் ஜோஹர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமிதாப் பச்சனின் மகனும், பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சன் தனது தந்தை திரையுலகில் 50 ஆண்டுகள் பூர்த்தி செய்ததைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி ஒன்றைப் பதிவிட்டிருந்தார். மேலும் பாலிவுட் பிரபலங்கள் பலரும் அமிதாப் பச்சனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதில் பிரபல பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் அமிதாப் பச்சனுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து கரண் ஜோஹர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ பொழுதுபோக்கு உலகில் முன்னுதாரணக் கதையாக அமிதாப் எப்போதும் இருப்பார். வார்த்தைகளால் அவரது சாதனையை விவரிக்க முடியாது” என்று பதிவிட்டிருந்தார்.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு அவரது திரைத்துறைப் பங்களிப்புக்காக 2018-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது.
1969-ம் ஆண்டு வெளியான ‘சாத் இந்துஸ்தானி’ படத்தின் மூலம் அவர் திரைத்துறைக்குள் நுழைந்தார் அமிதாப் என்பது குறிப்பிடத்தக்கது.