பாலிவுட்டின் மூத்த நடிகரான அமிதாப் பச்சன் இன்று தனது 77-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
இந்தியாவில் செல்வால்வாக்கு மிக்க நடிகர்களில் ஒருவராக வலம் வரும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் 1969-ம் ஆண்டு வெளியான ‘சாத் இந்துஸ்தானி’ படத்தின் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்தார். அதன் பிறகு பாலிவுட்டில் தனக்கான உச்ச இடத்தையும் அமிதாப் அடைந்தார். அவருடைய பல படங்கள் தென்னிந்தியாவில் அதிகளவில் ரீமெக் செய்யப்பட்டன. இன்றும் குணசித்திர கதாப்பாத்திரங்களில் அமிதாப் பாலிவுட்டில் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார்.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு அவரது திரைத்துறைப் பங்களிப்புக்காக 2018-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது. மேலும் அவர் திரைத் துறையில் நுழைந்து பொன்விழா ஆண்டைக் கொண்டாடும் நேரத்தில், அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது.
அமிதாப்பின் பிறந்த நாளை தொடர்ந்து அமிதாப்பிற்கு பாலிவுட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளன அவற்றில் சில
சித்தார்த் மல்ஹோத்ரா
ஒவ்வொரு சினிமா ரசிகனும் திரையில் நீங்கள் உருவாக்கும் மாயா ஜாலத்தை காண திரையரங்குக்கு செல்வார்கள். உங்களிடமிருந்து நிறை கற்றுள்ளேன் . பிறந்த நாள் வாழ்த்துகள்.
பரீனிதி சோப்ரா
பிறந்த நாள் வாழ்த்துகள் சார். ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் கிடைக்க வாழ்த்துகள்.
பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் உட்பட பிற பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.