பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றிய இன்னொரு பயோபிக் தயாராகிறது. இதை பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கிறார். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறைச் சொல்லும் 'பிஎம் நரேந்திர மோடி' என்ற திரைப்படம் சில மாதங்களுக்கு முன் வெளியானது. விவேக் ஓபராய் இதில் மோடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் மோசமான விமர்சனங்களைப் பெற்றது.
தற்போது 'மன் பைரங்கி' என்ற பெயரில் நரேந்திர மோடியைப் பற்றிய மற்றொரு படம் வெளியாகவுள்ளது. நரேந்திர மோடியின் 69-வது பிறந்தநாளான இன்று, இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் பிரபாஸ் வெளியிட்டார்.
இந்தப் படத்தைப் பற்றி பேசிய பன்சாலி, "இந்தக் கதை நன்றாக ஆய்வு செய்யப்பட்ட பிறகு எழுதப்பட்டுள்ளது. நமது பிரதமரின் வாழ்க்கையில் திருப்புமுனையாக இருந்த விஷயம் என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது. கேள்விப்படாத இந்தக் கதை சொல்லப்பட வேண்டும் என்று நினைத்தேன். இந்தப் படம் எல்லாருக்கும் போய் சேரும் வகையில், எல்லாருக்குமான கருத்தைக் கொண்டுள்ளது" என்றார்.
படத்தின் இயக்குநர் சஞ்சய் த்ரிபாதி பேசுகையில், "'மன் பைரங்கி' மனிதத்தைப் பற்றிய, நமது நாட்டின் வலிமையான தலைவராக உருவான ஒருவரின் சுய கண்டிபிடிப்பைப் பற்றிய கதை" என்று குறிப்பிட்டார்.
என் வாழ்க்கையை மாற்றிய படம்: பிரியதர்ஷினி ராஜ்குமார்