கோப்புப் படம் 
பாலிவுட்

ரன்வீர் ரசிகர் உரையாடலில் தீபிகாவின் 'அப்பா' கமெண்ட்: குறியீடாக எடுத்துக்கொண்ட நெட்டிசன்கள்

செய்திப்பிரிவு

தீபிகா படுகோனேவும் - ரன்வீர் சிங்கும் திருமணம் செய்து கொண்டதிலிருந்தே, இந்த நட்சத்திர தம்பதியை இணையத்தில் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. பொதுவில் ஒருவருக்கு ஒருவர் அன்பு பரிமாறுவதும் இந்தப் புகழுக்குக் காரணம்.

சமீபத்தில் தனது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில், நேரலையில் உரையாடினார் ரன்வீர் சிங். அப்போது தீபிகாவின் பக்கத்திலிருந்து ஹாய் டாடி (அப்பா) என்று ஒரு கமெண்ட் வந்தது. மேலும் இதில் ஒரு குழந்தையின் முக எமோஜியும், இதயம் எமோஜியும் போட்டிருந்தார். இந்த நேரலையின் போது எண்ணற்ற கருத்துகள் வந்துகொண்டே இருந்ததால் பலர் தீபிகா பதிவு செய்த கமெண்ட்டைக் கவனிக்கவில்லை.

சிறிது நேரத்தில் இந்தத் தம்பதிகளின் நெருங்கிய நண்பரான சக நடிகர் அர்ஜுன் கபூர், தனது பக்கத்திலிருந்து, "அண்ணா, அண்ணி உங்களுக்கு ஒன்று தரப்போகிறார்" என்று கமெண்ட் போட்டார்.


தீபிகா மற்றும் அர்ஜுன் கபூரின் கமெண்ட்

இவர்களின் இந்த உரையாடல் விரைவில் வைரலாகப் பரவ ஆரம்பிக்க, தீபிகா கர்ப்பமாக இருக்கிறார், அதனால் தான் இப்படி சூசகமாக கமெண்ட் செய்துள்ளார், அதனால் தான் குழந்தை முக எமோஜி இருந்தது என்றெல்லாம் கருத்துப் பகிர ஆரம்பித்தனர்.

ஆனால் சிலர் இப்படி ஆர்வக்கோளாறில் பதிவிட்டு வரும் ரசிகர்களிடம், ரன்வீர் தீபிகாவை பேபி என்றார், அதனால் தான் அவர் டாடி என்றார். அவ்வளவே என்று சாந்தப்படுத்தினர்.

தற்போது '83 டயரீஸ்' படத்துக்காக ரன்வீர் சிங்கும், தீபிகாவும் லண்டன் சென்றுள்ளனர். இந்தப் படத்தில் கபில்தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீரும், அவர் மனைவி ரோமி தேவ் கதாபாத்திரத்தில் தீபிகாவும் நடிக்கின்றனர். திருமணத்துக்குப் பிறகு இவர்கள் இணைந்து நடிக்கும் முதல் படம் இது.

SCROLL FOR NEXT