பாலிவுட்

7 நாடுகளில் ஹ்ரித்திக் ரோஷன் - டைகர் ஷிராஃப் மோதும் வார்; அக்டோபர் 2-ல் வெளியாகிறது

செய்திப்பிரிவு

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிரித்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷிராஃப் இணைந்து நடிக்கும் வார் படம் பாலிவுட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான போண்டி கடற்கரையை ஒரு முக்கியமான படப்பிடிப்பு நடந்துள்ளது. உலகின் 7 வெவ்வேறு நாடுகளிலும் 15 உலக நகரங்களிலும் ஹிரித்திக் மற்றும் டைகர் ஒருவருக்கொருவர் இரக்கமின்றி சண்டையிடுவதது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து இயக்குநர் சித்தார்த் ஆனந்த் கூறுகையில், '' 'வார்' என்பது நம் காலத்தின் மிகவும் முக்கியமான படம். ஏழு வெவ்வேறு நாடுகளில் ஹிரித்திக் மற்றும் டைகர் ஒருவருக்கொருவர் துரத்துவதையும் வேட்டையாடுவதையும் படமாக்கியுள்ளோம். படத்தின் முக்கிய தருணங்களில் ஒன்றைப் படமாக்க ஆஸ்திரேலியா செல்ல வேண்டியிருந்தது. போண்டி கடற்கரை என் வாழ்க்கையில் நான் கண்ட மிக அழகான கடற்கரை. காட்சி பார்வைக்குத் தேவையானதாக இருப்பதால், படத்திற்காக நாங்கள் போண்டி கடற்கரையை முடக்கியுள்ளோம். இந்தக் காட்சி படத்தில் ஒரு பெரிய தருணம்'' என்கிறார்.

ஹிரித்திக் ரோஷனுடன் ஜோடியாக வாணி கபூர் நடித்துள்ள யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் ஆக்‌ஷன் படமான வார் அக்டோபர் 2 ஆம் தேதி அன்று இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது.

SCROLL FOR NEXT