பாலிவுட்

கலாய்க்க நினைத்த தாப்ஸி: வாக்குவாதம் செய்த நெட்டிசன்கள்

செய்திப்பிரிவு

’கபீர் சிங்’ இயக்குநரை சூசகமாகக் கலயாக்க நினைத்து நெட்டிசன்களிடம் வாக்கு வாதத்தில் இறங்கியுள்ளார் நடிகை தாப்ஸி.

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பிரபலமானவர் நடிகை தாப்ஸி. இதில் பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவர் அவர். 

நாக்பூரில் 19 வயது காதலியைக் கொன்ற காதலர் பற்றிய செய்தியை ட்விட்டரில் பகிர்ந்த தாப்ஸி, அதனுடன், "ஒரு வேளை அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அதிகமாகக் காதலித்துள்ளனர். இந்த செயல் அந்தப் பெண் மீது இவரின் உண்மையான காதலுக்கான ஒரு அத்தாட்சி" என்று குறிப்பிட்டுள்ளார் தாப்ஸி.

காதலர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் சுதந்திரம் கூட இல்லையென்றால் அது காதல் இல்லை என்கிற ரீதியில் ‘கபீர் சிங்’ இயக்குநர் சந்தீப் வாங்கா ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதை மறைமுகமாகக் குறிப்பிட்டே தாப்ஸி இவ்வாறு பதிவிட்டுள்ளார் என நெட்டிசன்கள் இதை பகிர ஆரம்பித்தனர். 

மேலும் சிலர், இது போன்ற கொலை செய்தியை வைத்து இப்படி பேசுவது தவறு என தாப்ஸியை திட்ட ஆரம்பித்தனர்.

இதற்கு தாப்ஸி, ''நையாண்டி பற்றித் தெரியாதவர்கள் எனது ட்வீட்டையும் என்னையும் புறக்கணித்து விடுங்க. உங்களை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி'' என்று பதில் பதிவிட்டுள்ளார். மேலும் இன்னும் சில பயனர்களுக்கும் தனித்தனியாக பதில்கள் அளித்துள்ளார். 

SCROLL FOR NEXT