நடிகை பூஜா பத்ரா, நடிகர் நவாப் ஷாவை மணந்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார்.
90-களில் பாலிவுட்டில் பிரபலமான நடிகை பூஜா. தமிழில் 'ஒருவன்', 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். நவாப், 'டான் 2', 'டைகர் ஜிந்தா ஹை' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது ரஜினிகாந்துடன் 'தர்பார்' படத்திலும் நடித்து வருகிறார்.
இருவரும் இந்த வருடம் பிப்ரவர் மாதம் தான் முதல் முறையாக ஒருவரை ஒருவர் சந்தித்தனர். புதுடெல்லியில் ஜூலை நான்காம் தேதி, இருதரப்பு குடும்பத்தினர் முன்னிலையில் இவர்கள் திருமணம் ஆர்ய சமாஜ் முறைப்படி நடந்து முடிந்தது.
தற்போது இவர்களின் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகின்றன.
பூஜா பத்ரா இதற்கு முன் 2002-ம் ஆண்டு, அமெரிக்காவில் இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரைத் திருமணம் செய்து 2011-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.