தேசிய கொடியை அவமதித்ததாக ஹிந்தி திரை நட்சத்திரங்கள் என அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் ஆகியோர் மீது உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது.
அரசு தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சேதன் திமான் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ள தாவது: உலகக் கோப்பை கிரிக் கெட் போட்டியின்போது இந்தியா பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது. அது தொடர்பான வீடியோவை நான் எனது நண்பர் களுடன் சமீபத்தில் இணையத்தில் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அதில் அமிதாப் பச்சன், இந்த வெற்றியை கொண்டாடும் காட்சியும் இடம் பெற்றிருந்தது. அதில் அவர் தேசிய கொடியை தனது முதுகிலும், தோளிலும் போர்த்தி, இழுத்து தேய்த்துக் கொண்டிருந்தார்.
முன்னதாக 2011-ம் ஆண்டு அமிதாப்பின் மகன் அபிஷேக் பச்சனும் தேசியக் கொடியை தன்மீது போர்த்தியும், தேய்த்தும் அவமதித்தார் என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், இருவரும் ஜூலை 13-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டுமென்று உத்தரவிட்டது.
மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்ததால் அமிதாப் மீது ஏற் கெனவே பல்வேறு நீதிமன்றங் களில் வழக்குத் தொடரப்பட்டுள் ளது. இந்நிலையில் அவர் மீது மேலும் ஒரு வழக்கு சேர்ந்துள்ளது.