பாலிவுட்

பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் அனிருத், ஆர்.டி.ராஜசேகர் இணையும் அகிரா

செய்திப்பிரிவு

சோனாக்‌ஷி சின்ஹாவை நாயகியாக நடிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்திற்கு 'அகிரா' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

'அகிரா' என்பது ஜப்பானிய வார்த்தை. இந்த வார்த்தைக்கு பிரகாசமானவள், புத்திசாலியானவள் என்று பொருள். ஃபாக்ஸ் ஸ்டார் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு திங்கள் கிழமை (மார்ச் 16) துவங்கியுள்ளது. பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இந்தப் படத்தின் வில்லனாக நடிக்கிறார். சோனாக்‌ஷி சின்ஹாவின் தந்தை சத்ருகன் சின்ஹாவும் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார்.

தமிழில் அருள்நிதி நடிப்பில் வெளியான 'மௌனகுரு' படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்தியில் இயக்கவுள்ளார் என முன்னதாக தெரிவிக்கப்பட்டது. தமிழைப் போல அல்லாமல், நாயகியை மையமாக வைத்து திரைக்கதையை முருகதாஸ் மாற்றியுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸுடன் 'கஜினி' படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் 'அகிரா'விலும் ஒளிப்பதிவாளராக இணைகிறார். அனிருத் இசையமைக்கிறார்.

SCROLL FOR NEXT