பாலிவுட்

ஐ.நா.வின் உலக மகிழ்ச்சி தினம்: விருப்ப பாடலை பரிந்துரைத்தார் ரஹ்மான்

பிடிஐ

ஐ.நா.வின் உலக மகிழ்ச்சி தினத்தையொட்டி இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், அமைதிக்கான நோபல் பரிசு வென்ற இந்தியர் கைலாஷ் சத்யார்த்தி ஆகியோர் தங்களது விருப்பப் பாடல்களை பரிந்துரைத்தனர்.

ஐ.நா. சபை சார்பில் உலக மகிழ்ச்சி தினம் கடந்த 20-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதை யொட்டி உலகம் முழுவதும் பல் வேறு துறை சார்ந்த பிரபலங் கள் தங்களின் விருப்பப் பாடலை பரிந்துரைக்க கேட்டுக் கொள்ளப் பட்டது.

ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன், பாடகர் ஸ்டீவ் வோண்டரின் ‘சைன்டு, சீல்டு, டெலிவர்டு’ என்ற பாடலை பரிந்துரைத்தார். தமிழகத்தைச் சேர்ந்த ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தான் இசையமைத்த ‘இன்பினிட் லவ்’ ஆல்பத்தை விருப்பப் பாடலாக பரிந்துரை செய்தார்.

அமைதிக்கான நோபல் பரிசை வென்ற இந்தியர் கைலாஷ் சத்யார்த்தி, மகாத்மா காந்தியின் மனம் கவர்ந்த பாடலான ‘வைஷ்ணவ ஜனதோ மேரே தேனே…’ என்ற பாடலை தனது விருப்பப் பாடலாக பரிந்துரைத்தார்.

இதேபோல் பல்வேறு பிரபலங் கள் தங்களின் விருப்பப் பாடலை பரிந்துரை செய்துள்ளனர். இவை அனைத்தும் தொகுக்கப்பட்டு ஐ.நா. சபையின் இணையதளத் தில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளன.

SCROLL FOR NEXT