பாலிவுட்

தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ரா - ராணி முகர்ஜி திருமணம்

ஸ்கிரீனன்

பாலிவுட்டின் முன்னணி நாயகியான ராணி முகர்ஜியும், தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவும் இத்தாலியில் 21ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

பாலிவுட்டின் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் ராணி முகர்ஜி. அவரும் தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் ஆதித்யா சோப்ரா - ராணி முகர்ஜி திருமணம், 21ம் தேதி இத்தாலி நாட்டில் நடைபெற்றதாக அறிவித்து இருக்கிறார்கள்.

இது தொடர்பாக ராணி முகர்ஜி விடுத்துள்ள அறிக்கையில், "எனது வாழ்க்கையின் சந்தோஷமான நாளை, உலகத்தில் உள்ள அனைத்து ரசிகர்களுக்கும் தெரிவிக்கிறேன். உங்களது அன்பு தான் என்னை இத்தனை வருடங்களாக வழி நடத்தியது. இத்தாலி நாட்டில் எனது நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் ஆதித்யா சோப்ராவுடன் திருமணம் நடைபெற்றது." என்று கூறியுள்ளார்.

ராணி முகர்ஜி திருமணம் பற்றிய செய்தி வெளியானவுடன், பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் பலரும் தங்களது ட்விட்டர் தளம் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

SCROLL FOR NEXT