பாலிவுட்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகள் சோனாக்‌ஷியுடன் நடிக்கும் சத்ருகன் சின்ஹா

ஐஏஎன்எஸ்

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் இந்திப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் 14-ஆம் தேதி துவங்கவுள்ளது. நடிகை சோனாக்‌ஷி சின்ஹா பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார்.

தமிழில் ஹிட்டான 'மௌனகுரு' படத்தின் அதிகாரப்பூர்வ இந்தி ரீமேக்கை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார். தமிழில் நாயகனை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த படத்தின் கதை, இந்தியில் நாயகியை சுற்றி நடக்குமாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதில் நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவின் தந்தையும், முன்னாள் பாலிவுட் நட்சத்திரமுமான நடிகர் சத்ருகன் சின்ஹா முக்கியப் பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மேலும், இயக்குநர் அனுராக் காஷ்யப், வில்லனாக நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் குழுவைப் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

இந்தி ரீமேக்கான ’கஜினி’, ’துப்பாக்கி’யின் ரீமேக்கான ’ஹாலிடே’ ஆகிய படங்களைத் தொடர்ந்து முருகதாஸ் இந்தியில் இயக்கும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தகது.

SCROLL FOR NEXT