'ராஞ்சனா (Raanjhanaa)' படத்திற்காக சிறந்த புதுமுக நடிகருக்கான ஐ.ஐ.எஃப்.ஏ விருதினை வென்றிருக்கிறார் நடிகர் தனுஷ்.
வருடந்தோறும் சிறந்த இந்தி நடிகர், நடிகைகள், படங்களுக்கான ஐ.ஐ.எஃப்.ஏ விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 15வது ஆண்டிற்கான விருது வழங்கும் விழா TAMPA BAY இடத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் ஆனந்த் எல்.ராய் படத்தில் தனுஷின் சிறப்பான நடிப்பிற்காக 'சிறந்த புதுமுக நடிகர் (BEST MALE DEBUT)' விருது வழங்கப்பட்டது. அவ்விழாவில் தனுஷுடன் அவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷும் கலந்து கொண்டார்.
ஐ.ஐ.எஃப்.ஏ விருது வென்றது குறித்து தனுஷ், " எனது முதல் ஐ.ஐ.எஃப்.ஏ விருதினை வென்றிருக்கிறேன். உங்களது ஆதரவும், அன்பினால் மட்டுமே இந்த விருது கிடைத்திருக்கிறது. ரசிகர்கள் என்னைப் பேசவிடவில்லை. ‘கொலவெறி’ பாடலை பாடும்படி கேட்டுக்கொண்டார்கள். நானும் சில வரிகள் பாடினேன். அந்த பாடலைப் பாடி 3 வருடங்கள் ஆகிவிட்டன.. இருந்தும்.. “ என்று ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இதர ஐ.ஐ.எஃப்.ஏ விருது வென்றவர்கள் பட்டியல்:
வாழ்நாள் சாதனையாளர் விருது : சத்ருஹன் சின்ஹா
சிறந்த பொழுதுபோக்கு நடிகை : தீபிகா படுகோன்
சிறந்த படம் : பாக் மில்கா பாக்
சிறந்த நடிகர் : பர்கான் அக்தர் (பாக் மில்கா பாக்)
சிறந்த நடிகை : தீபிகா படுகோன் (சென்னை எக்ஸ்பிரஸ்)
சிறந்த உறுதுணை நடிகர் : ஆதித்யா ராய் கபூர் (Yeh Jawani hai Deewani)
சிறந்த உறுதுணை நடிகை : திவ்யா தத்தா (பாக் மில்கா பாக்)
சிறந்த நகைச்சுவை நடிகர்: அர்ஷத் வார்சி (ஜாலி எல்.எல்.பி)
சிறந்த வில்லன் நடிகர் : ரிஷி கபூர் (டி டே)
சிறந்த கதையாசிரியர் : பர்ஷுன் ஜோஷி (பாக் மில்கா பாக்)
சிறந்த இயக்குநர் : ராகேஷ் ஒம் பிரகாஷ் மேஹ்ரா (பாக் மில்கா பாக்)