பாலிவுட்

ஆமிர் கானின் பீ.கே. படம் ரூ.600 கோடி வசூல்

செய்திப்பிரிவு

ஆமிர் கான் நடித்துள்ள பீ.கே. திரைப்படம் இதுவரை ரூ.602 கோடி வசூலை வாரி குவித்து புதிய சாதனை படைத்துள்ளது.

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஆமிர்கான், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ள பீ.கே. இந்தி திரைப்படம் கடந்த டிசம்பர் 19-ம் தேதி வெளியானது. இந்த திரைப்படம் இந்தியாவில் இதுவரை ரூ.451 கோடி வசூலை வாரி குவித் துள்ளது. இதேபோல் வெளிநாடு களில் ரூ.151 கோடி வசூலை ஈட்டி யுள்ளது. ஒட்டுமொத்தமாக இது வரை ரூ.602 கோடி வசூலாகி யுள்ளது. இந்தி திரைப்பட வரலாற்றில் இது ஒரு புதிய சாதனையாகும்.

பி.கே. திரைப்படம் இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாக நாடு முழுவதும் பல்வேறு போராட்டம், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது நினைவுகூரத்தக்கது.

SCROLL FOR NEXT