ஹ்ரித்திக் ரோஷன் விளம்பரத் தூதராக இருக்கும் ஒரு ஜிம்மின் வாடிக்கையாளர் ஹ்ரித்திக் மீது மோசடி வழக்கு பதிவு செய்துள்ளார்.
கல்ட்.ஃபிட் என்கிற ஜிம் பெங்களூரை மையமாகக் கொண்டு இந்தியாவின் முக்கிய நகரங்கள் கிளைகள் வைத்துள்ளது. இதன் ஹைதராபாத் கிளையின் வாடிக்கையாளர் ஒருவர், ஜிம்மின் சேவைகள் குறித்து அவர்கள் தவறான வாக்குறுதிகள் கொடுத்ததாக மோசடி வழக்கு தொடுத்துள்ளார்.
ஜிம்மில் அன்லிமிடட் வகுப்புகளுக்கான கட்டணம் செலுத்திய பின்னும் தனக்கு தினமும் பயிற்சி வழங்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடம் நவம்பர் மாதம் 10 மாத பயிற்சி வகுப்புகளுக்காக ரூ.17,490 செலுத்தியதாகவும், தினம் பயிற்சிகள் தராமல் ஏமாற்றப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து ஐபிசி பிரிவு 420 மற்றும் 406ன் கீழ் ஹ்ரித்திக் ரோஷனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் தரப்பில், தங்கள் தரப்பு நடவடிக்கை பற்றி ஆலோசித்து வருவதாகவும், புகார் கொடுத்த நபர் தங்கள் ஊழியர்களிடம் தவறாகவும், வன்முறையாகவும் நடந்து கொண்டார் என்றும், இந்தப் பிரச்சினைக்கு தங்கள் விளம்பரத் தூதரை இழுப்பது தவறு என்றும் கூறியுள்ளது.