நடிகர் சஞ்சய் தத்தின் மகன் த்ரிஷலா தத், தனது காதலரின் மறைவு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் சஞ்சய் தத்துக்கும் அவரது முதல் மனைவி ரிச்சா சர்மாவிற்கும் பிறந்தவர் த்ரிஷலா. 1996ஆம் வருடம் ரிச்சா மூளை கட்டி பிரச்சினையால் காலமானார். இதனால் த்ரிஷலா அமெரிக்காவில் தனது தாத்தா பாட்டியிடம் வளர்ந்தார். கடந்த ஏப்ரல் மாதம், இத்தாலிய இளைஞர் ஒருவரை தான் காதலிப்பதாக பகிர்ந்திருந்தார் த்ரிஷலா. தற்போது அவர் இறந்துவிட்டதாக த்ரிஷலா பதிவிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"மனமுடைந்துவிட்டது. என்னை காதலித்ததற்கு, பாதுகாத்ததற்கு, பார்த்துக்கொண்டதற்கு நன்றி. இதுவரை என் வாழ்வில் சந்திக்காத மகிழ்ச்சியை எனக்குத் தந்திருக்கிறாய். இன்னை சந்தித்து, உன்னால் காதலிக்கப்பட்டதால் நான் தான் இந்த உலகிலேயே அதிர்ஷ்டமான பெண். எப்போதும் என்னுள் நீ இருப்பாய். உன்னை நான் காதலிக்கிறேன். நாம் மீண்டும் சந்திக்கும் வரை நீ இல்லாமல் போவதைக் கண்டிப்பாக உணர்வேன். என்றும் உன் பெல்லா மியா" என்று காதலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தோட பகிர்ந்துள்ளார் த்ரிஷலா.
மேலும் கடந்த ஜூலை 2-ஆம் தேதி அவர் மறைந்தது போனதாகவும் குறிப்பிட்டுள்ளார்.