பாலிவுட்

ஓய்வு பெறுவதை நினைத்து பார்க்காதீர்கள்: தோனிக்கு லதா மங்கேஷ்கர் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

ஓய்வு பெறுவதை தற்போது  நினைத்து பார்க்காதீர்கள் என்று இந்திய வீரர் தோனிக்கு பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  மான்செஸ்டரில் நேற்று நடந்த உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது நியூஸிலாந்து அணி. தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து 24 ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியநிலையில் தோனியும், ரவிந்திர ஜடேஜாவும் ஆடிய இன்னிங்ஸ் சிறப்புக்குறியது. தோனி 72 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தும், ஜடேஜா 59 பந்துகளில் 77 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இந்த  நிலையில் உலகக் கோப்பைப் போட்டியுடன் தோனி ஓய்வு பெறுவதாக தகவல் வெளியாகி வருகின்றனது.

இதனைத் தொடர்ந்து திரைப் பிரபலங்கள் உட்பட பலரு தோனி தற்போது ஓய்வு பெறக் கூடாது என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பாலிவுட் பாடகி லதா மங்கேஷ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில்,

”வணக்கம் தோனி... நீங்கள் ஓய்வு பெற போகிறீர்கள் என்று சமீப நாட்களாக நான் கேள்விப்படுகிறேன். தயவு செய்து அதனை ஒருபோதும் நினைக்காதீர்கள். 

உங்களை போன்று விளையாடுபவர்கள் இந்திய அணிக்கு தேவை.

இது என்னுடைய பணிவான வேண்டுகோள்.  தயவு செய்து ஓய்வு பெறுவதை நினைத்து பார்க்காதீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்திய ரசிகர்கள் பலரும் தோனி ஓய்வு பெற வேண்டாம் என்று #donotretiredhoni என்ற ஹாஷ்டேக்கை  இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT