பாலிவுட்

நவாஸுதின் சித்திக் ஜோடியாக நடிக்கும் தமன்னா

செய்திப்பிரிவு

பிரபல பாலிவுட் நடிகர் நவாஸுதின் சித்திக் ஜோடியாக தமன்னா நடிக்கவுள்ளார். நவாஸுதின் சகோதரர் ஷமாஸ் நவாப் இந்தப் படத்தை இயக்குகிறார்.

‘போலே சுடியான்’ என்ற திரைப்படத்தில் நவாஸுதின் நடிப்பார் என்றும், அவர் ஜோடியாக மவுனி ராய் நடிக்கவுள்ளார் என்றும் முதலில் அறிவிப்புகள் வெளியாகின. ஆனால், மவுனி ராய் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டதில் இருந்தே அவர் ஒழுங்காக நடந்து கொள்ளவில்லை என்றும், கதை கேட்கக்கூட தாமதமாக வந்து தர்மசங்கடத்தை ஏற்படுத்தினார் என்றும் ‘போலே சுடியான்’ தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

ஆனால், மவுனி ராய் தரப்போ, சில முரண்பாடுகள் காரணமாகப் படத்தை ஒப்புக்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளது. தற்போது மவுனி ராய்க்குப் பதிலாக படத்தின் நாயகியாக தமன்னா நடிப்பார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது, தனக்கு ஒரு பரிசோதனை முயற்சியாக இருக்கும் என்று தமன்னா கூறியுள்ளார்.

இந்தப் படத்தில் இயக்குநர் அனுராக் கஷ்யப்பும் சிறிய வேடத்தில் தோன்றவுள்ளார். ‘நவாஸுதின் இதுவரை என்னிடம் எதுவும் கேட்டதில்லை. இந்த வேடத்தில் நடிக்கக் கேட்டதால் நடிக்கிறேன்’ என்று அனுராக் கூறியுள்ளார்.

சமூகத்தில் நடந்து கொண்டிருக்கும் ஒரு முக்கியப் பிரச்சினையை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதை இருக்கும் என்று தெரிகிறது. ராஜஸ்தானில் ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

SCROLL FOR NEXT