பாலிவுட்

பாலிவுட் படத்தில் நடிக்கும் பாபா ராம்தேவ்

ஐஏஎன்எஸ்

யோகா குரு பாபா ராம்தேவ், 'யே ஹாய் இந்தியா' என்ற படத்தின் மூலம் நடிப்புத் துறையிலும் நுழைகிறார்.

மேலும் சையான் சையான் என்ற பாடலிலும் அவர் தோன்றவுள்ளார். இந்த படத்தின் விளம்பரங்களில் ஈடுபட்டுவரும் ராம்தேவ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "நம் நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கின்றனர். வேதங்கள் உருவான நாடு இது. ஆனால் மற்ற நாட்டினருக்கு நமது தேசம் குறித்த தவறான பார்வை இருக்கிறது. பாம்புகள் மட்டும் இருக்கும் நாடல்ல இது. ஒட்டுமொத்த உலகையும் வழிநடத்தும் வல்லமை இந்தியாவுக்கு இருக்கிறது.

இந்த மாற்றம்தான் 'யே ஹாய் இந்தியா' படத்தில் பிரதிபலிக்கப்பட்டுள்ளது. அதனால் ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு இந்த படத்தை ஆதரிப்பது என்று முடிவெடுத்துள்ளேன். இத்தகைய படங்களை ஆதரிக்குமாறு ஒவ்வொரு குடிமகனையும் கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார். யே ஹாய் இந்தியா ஆக்ஸ்ட் 18ஆம் தேதி வெளியாகவுள்ளது.

SCROLL FOR NEXT