பாலிவுட்

க்ளைமேக்ஸ் படப்பிடிப்பை நினைத்தால் பதற்றமாக இருக்கிறது: சல்மான் பட இயக்குநர் ட்வீட்

செய்திப்பிரிவு

டைகர் ஜிந்தா ஹை படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி படப்பிடிப்பை நினைத்தால் பதற்றமாக இருக்கிறது என படத்தின் இயக்குநர் அலி அப்பாஸ் ஸாஃபர் ட்வீட் செய்துள்ளார்.

சல்மான்கான் - கேத்ரீனா கைஃப் நடிப்பில் வந்து வெற்றிபெற்ற ஏக் தா டைகர் படத்தின் இரண்டாம் பாகமே டைகர் ஜிந்தா ஹை. க்றிஸ்துமஸ் தினத்தன்று படத்தை வெளியிட வேலைகள் நடந்து வருகின்றன.

படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி படப்பிடிப்பு ஆகஸ்டு 28 தொடங்கியிருக்கிறது. இது குறித்து ட்வீட் செய்துள்ள படத்தின் இயக்குநர், "டைகர் ஜிந்தா ஹை முடிய இன்னும் 22 நாட்கள் தான் இருக்கின்றன. அதிக ஆக்ஷன் நிறைந்த க்ளைமேக்ஸ் காட்சி படப்பிடிப்பு நாளை தொடங்கவுள்ளது. பதற்றமாகவும், ஆர்வமாகவும் இருக்கிறது" என பதிவிட்டுள்ளார்.

யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, ஏற்கனவே ஆஸ்திரியா, அபுதாபி ஆகிய இடங்களில் நடந்துள்ளது. க்ளைமேக்ஸ் காட்சி படப்பிடிப்பு எங்கு நடக்கும் என தெரிவிக்கப்படவில்லை.

SCROLL FOR NEXT