தான் நடித்த 'ஜக்கா ஜாஸூஸ்' படம் பற்றிய தனது தந்தை ரிஷி கபூரின் விமர்சனத்தை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என நடிகர் ரன்பீர் கபூர் தெரிவித்துள்ளார்.
ரன்பீர் கபூர் நடித்து, இணை தயாரிப்பில் ஈடுபட்ட 'ஜக்கா ஜாஸூஸ்' போதிய வரவேற்பைப் பெறவில்லை. இந்தப் படம் பற்றி பேசிய ரன்பீர் கபூரின் தந்தை ரிஷி கபூர், இயக்குநர் அனுராக் பாசுவை சாடியிருந்தார்.
இதுபற்றி கருத்து கூறிய ரன்பீர் கபூர், "எனது தந்தை உணர்வுப்பூர்வமான மனிதர். அதனால் அப்படி பேசியிருக்கிறார். அவரது கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நாங்கள் என்ன செய்கிறோம் என்று முதலிலிருந்தே எனக்கும் இயக்குநருக்கும் தெரியும். சில சமயங்களில் அது வரவேற்பைப் பெறும், சிலசமயங்களில் பெறாது. இதை நான் தோல்வியாக பார்க்கவில்லை. கற்றலாக எடுத்துக் கொள்கிறேன்" என்றார்.