பாலிவுட்

இணையத்தில் வெளியான டாய்லெட் - ஏக் பிரேம் கதா: அக்‌ஷய்குமார் வேண்டுகோள்

ஸ்கிரீனன்

இணையத்தில் வெளியான 'டாய்லெட் - ஏக் பிரேம் கதா' படம் தொடர்பாக அக்‌ஷய்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அக்‌ஷய்குமார், அனுபம் கேர், சனா கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டாய்லெட் - ஏக் பிரேம் கதா'. ஜூலை 11-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தை ஸ்ரீ நாராயண் சிங் இயக்கியுள்ளார்.

பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் இணையத்தில் வெளியாகிவிட்டது. இதனால் இந்தி திரையுலகம் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறது. மேலும், குற்ற தடுப்புப் பிரிவு போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக அக்‌ஷய்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

திருட்டு விசிடி ஒழிப்புக்கான அவசரம் அதிகரித்துவிட்டது. எங்களது டாய்லெட் - ஏக் பிரேம் கதா படம் கசியவிடப்பட்ட விவகாரத்தில் குற்ற தடுப்புப் பிரிவு போலீஸார் எடுத்துள்ள நடவடிக்கை நம்பிக்கையளிப்பதாக உள்ளது. இத்தருணத்தில், திருட்டு விசிடிக்களை எதிர்ப்போம் என்பதில் உறுதியுடன் இருக்குமாறு எனது நண்பர்களுக்கும் சக ஊழியர்களுக்கும் ரசிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

இவ்வாறு தெரிவித்துள்ளார் அக்‌ஷய்குமார்

SCROLL FOR NEXT