பாலிவுட்

இந்தித் திரையுலகில் நிறவெறியா? - வருத்தம் தோய்ந்த தொனியில் நடிகர் நவாஸுதீன் சித்திக் ட்வீட்

செய்திப்பிரிவு

இந்தி சினிமாவில் மிகவும் திறமை வாய்ந்த வித்தக நடிகர் என்ற பெயரை நவாஸுதீன் சித்திக் பெற்றிருந்தாலும் திரையுலகில் இன்னமும் நிறவெறித்தன்மை நீங்கவில்லை என்பதை சூசகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

43 வயது நவாஸுதீன் சித்திக் தனது ட்விட்டரில், ''அழகானவர்களுடனும் நிறத்தில் பளிச்சென்று இருப்பவர்களுடனும் நான் ஜோடி சேர முடியாது என்று எனக்கு உணர்த்தியமைக்கு நன்றி. ஏனெனில் நான் கருப்பு, பார்க்க அழகாக இல்லாதவன், ஆனால் நான் இதில் கவனம் செலுத்துவதில்லை'' என்று ட்வீட் செய்திருந்தார்.

ஆனால் அவர் இவ்வாறு வருந்தி ட்வீட் செய்யும் அளவுக்கு அவருக்கு நேர்ந்ததென்ன என்பதை அவர் விவரிக்கவில்லை. கடந்த ஆண்டு ஒரு நேர்காணலில் நல்ல தோற்றத்தை விட திறமைக்கு திரையுலகம் மதிப்பளிப்பதாக பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவருக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை, இவ்வாறு ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT