இந்தியில் 'தனி ஒருவன்' ரீமேக்கில் சித்தார்த் மல்கோத்ரா மற்றும் அர்ஜூன் கபூர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'தனி ஒருவன்'. ஹிப் ஹாப் ஆதி இசையமைத்த இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. பெரும் வரவேற்பைப் பெற்ற தெலுங்கில் ராம்சரண நடிக்க 'துருவா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு, அங்கு பெரும் வெற்றி பெற்றது.
'தனி ஒருவன்' படத்தின் இந்தி ரீமேக் பேச்சுவார்த்தை நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. சல்மான்கான், ரன்வீர் சிங், வருண் தவான் உள்ளிட்ட பல பெயர்கள், இப்படத்தின் ரீமேக்கில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின.
இம்முறை சித்தார்த் மல்கோத்ரா மற்றும் அர்ஜூன் கபூர் நடிக்கவுள்ளதாகவும், சபீர் கான் இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் படக்குழுவை அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.