பாலிவுட்

வாள் சண்டைக் காட்சியில் கங்கணா காயம்: நெற்றியில் 15 தையல்

பிடிஐ

மனிகர்னிக்கா படத்தின் வாள் சண்டைக் காட்சி ஒன்றில் நடித்தபோது பாலிவுட் நடிகை கங்கணா  ரணாவத்துக்கு காயம் ஏற்பட்டது. இதில் அவரது நெற்றியில் 15 தையல்கள் போடப்படப்பட்டன.

பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் ஜான்சிராணி வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் மனிகர்னிக்கா படத்தில் ஜான்சிராணி வேடத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் தொடர்பான வாள் சண்டைக் காட்சி ஒன்று புதன்கிழமை படமாக்கப்பட்டு கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராவிதமாக கங்கணாவின் நெற்றியில் வாளின் முனை கீறியதில் அவரது நெற்றியிலிருந்து ரத்தம் கொட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காயம் ஏற்பட்ட இடத்தில் கங்கணாவுக்கு 15 தையல்கள் போடப்பட்டுள்ளது. தற்போது கங்கனா நலமாக உள்ளார். என்றும் ஒருவார ஓய்வுக்கு பிறகு கங்கனா வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து கங்கணா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “எனக்கு காயம் ஏற்பட்டபோது நான் பதட்டமாக இருந்தேன். என் முகம் முழுவதும் ரத்தமாக இருந்தது. எனக்கு இந்த காயம் பெருமையாக உள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT