'தூம் 3' படத்தில் அமீர்கான் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
'தூம்' சீரியஸ் படங்கள் என்றாலே, இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வரிசையில் 'தூம்' படத்தின் மூன்றாம் பாகம் வெளிவரவிருக்கிறது.
'தூம்' படம் என்றாலே, படங்களின் வில்லன் வேடம் தான் முக்கியமானதாக இருக்கும். 'தூம் 3' படத்தில் அமீர்கான் வில்லனாக நடித்து வருகிறார்.
இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறாராம் அமீர்கான். இதுவரை அமீர்கான் இரட்டை வேடத்தில் நடித்ததில்லை என்பதால் படத்தின் கதையை இரட்டை வேடத்திற்கு ஏற்றவாறு மாற்றியிருக்கிறார்களாம்.
ஒருவருக்கு உடம்பு சரியில்லாததால், இன்னொருவர் என்ன செய்கிறார் என்பதனை வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.
'தூம்' மூன்றாம் பாகம், அமீர்கான் வில்லன், அதிலும் இரட்டை வேடம் என்பதால் வசூலில் இரட்டைப் பங்கு அள்ளுவார்கள் என்கிறது மும்பை வட்டாரம்.