நடிகரும், இயக்குநருமான பிரபுதேவாவுடன் பணிபுரிய ஆவலாக இருப்பதாக பாலிவுட் நடிகர் சூரஜ் பஞ்சோலி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சூரஜ், ''இதற்கு மேல் என்னால் காத்திருக்க முடியாது பிரபுதேவா சார். உங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான். உங்களுடைய உத்வேகத்துக்கு நன்றி'' என்று தெரிவித்துள்ளார்.
படக்குழுவினரோடு இருக்கும் படத்தையும் அவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்தப்படம் பிரபுதேவாவின் இயக்கத்தில் உருவாகவுள்ள காமெடிப் படமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டி- சீரிஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
நடிகர் ஆதித்யா பஞ்சோலியின் மகனான சூரஜ் பஞ்சோலி 2015-ல் வெளியான 'ஹீரோ' படத்தின் மூலம் அறிமுகமானவர். ஜாக்கி ஷெராபின் நடிப்பில் 1983-ல் வெளியான 'ஹீரோ' படத்தின் ரீமேக் இது என்பது குறிப்பிடத்தக்கது.