பாலிவுட்

சல்மான் கானின் ட்யூப்லைட் வசூல் மந்தம்

ஐஏஎன்எஸ்

சல்மான் கான் நடிப்பில் வெளிவந்துள்ல 'ட்யூப்லைட்' திரைப்படம் எதிர்பார்த்த வசூலைப் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் நாள் வசூல் ரூ. 20 கோடியாக இருந்தது என்றும், இது சமீபத்திய சல்மான் படங்களை ஒப்பிடும்போது மிகக் குறைவு என்றும் கூறப்படுகிறது.

கபீர் கான் இயக்கத்தில் சல்மான்கான், சீன நடிகை ஸூ ஸூ ஆகியோர் நடிப்பில், 1962ஆம் ஆண்டு இந்திய-சீன போரை மையமாக வைத்து 'ட்யூப்லைட்' திரைப்படம் உருவாகியுள்ளது.

23-ஆம் தேதி வெளியான ட்யூப்லைட், முதல் நாலில் ரூ.21.15 கோடி வசூல் செய்தது. கடந்த 4 வருடங்களில் சல்மான்கான் நடிப்பில் வெளியான படங்களின் முதல் நாள் வசூலை விட இது மிகக்குறைவு என பாலிவுட் திரை விமர்சகர் தரன் ஆதர்ஷ் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன் 'ஏக் தா டைகர்' ரூ. 32.93 கோடி, 'கிக்' ரூ. 26.40 கோடி, 'பஜ்ரங்கி பைஜான்' ரூ. 27.25 கோடி, 'சுல்தான்' ரூ. 36.54 கோடி வசூலித்திருந்தது.

வசூல் ரீதியாகவும் 'ட்யூப்லைட்' பெரிதாக சோபிக்காததால் படம் பாதிக்கப்பட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் சல்மான் கான் இது குறித்து கவலைப்படாமல், "எனது படத்துக்கு மைனஸ் மதிப்பெண்கள் வரும் என நினைத்தேன். ஆனல விமர்சகர்கள் பரவாயில்லை. 1, 1.15 என மதிப்பளித்துள்ளனர். மகிழ்ச்சியாக இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.

இந்த வாரயிறுதி வசூல் ரூ.100 கோடியை எட்டுவது சந்தேகமே என துறை வல்லுநர்கள் கணித்துள்ளனர். திங்கட்கிழமை ரம்ஜான் என்பதால் அன்றைய நாளில் அதிக வசூல் எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT