தான் நடிக்கும் படங்களை இயக்குநர்களை வைத்தே ஒப்புக் கொள்வதாகவும், உடன் நடிக்கும் நடிகர்களை வைத்து அல்ல என்றும் நடிகை சோனம் கபூர் கூறியிருக்கிறார்.
சஞ்சாய் லீலா பன்சாலி இயக்கிய 'சவாரியா' என்ற படத்தின் மூலம் இந்தி திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் அனில் கபூரின் மகள் சோனம் கபூர்.
'டில்லி 6', 'பாக் மில்கா பாக்', 'ரான்ஞ்ஹனா' உள்ளிட்ட பல வரவேற்பு பெற்ற படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார். தற்போது மும்பையில் நடைபெற்று வரும் 15வது திரைப்பட விழாவில் பங்கேற்றார்.
அவ்விழாவில், "ஒரு படம் என்பது இயக்குநர்களை முன் வைத்து தான். நான் எப்போதுமே நடிகர்களை விட இயக்குநர்களை முன்வைத்து தான் படங்களை ஒப்புக் கொள்கிறேன்.
எப்போதுமே நடிகர்களை வைத்து ஒரு படம் கிடையாது. நான் ஒரு நடிகருடன் நடிக்க ஆசைப்படுகிறேன் என்பதை தப்பாக புரிந்து கொள்கின்றனர். இயக்குநர்களிடம் கதையை கேட்டு மட்டுமே படங்களைத் தேர்வு செய்கிறேன். அவர்கள் தான் ஒரு நல்ல படம் உருவாக காரணமானவர்கள் " என்று தெரிவித்து இருக்கிறார்.