பாலிவுட்

துபாய் சுற்றுலாத்துறை விளம்பரப் படத்தில் நடிக்கும் ஷாரூக்

ஐஏஎன்எஸ்

துபாய் சுற்றுலாத் துறைக்காக #BeMyGuest என்னும் விளம்பரப் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்கிறார் ஷாரூக் கான்.

இப்படத்தை கபீர் கான் இயக்குகிறார். படப்பிடிப்புக்காக மே 6-ம் தேதி ஷாரூக் கான் துபாய் சென்றார். துபாய் சுற்றுலாத் துறையை விளம்பரப்படுத்தும் வகையில் ஷாரூக் நடிக்கும் இரண்டாவது படம் இது. முதல் படம் சர்வதேச திரைப்பட விழாவில் கிராண்ட் பிக்ஸ் விருது வென்றுள்ளது.

படம் குறித்துப் பேசிய ஷாரூக் கான், ''இது மிகவும் சிறப்பாக இருக்கிறது. முதல் பாகத்தையே ரசித்து அனுபவித்துச் செய்தேன். இப்போது இரண்டாவது பாகம். துபாயில் இருக்க எனக்கு மிகவும் பிடிக்கும். இது அவ்வளவு அருமையான இடம் என்று நினைக்கிறேன். துபாயில் எல்லோருக்கும் எல்லாமும் இருக்கிறது'' என்றார்.

முதல் பாகத்தில் துபாயின் கண்கவரும் இடங்களை ஷாரூக் கான் விளக்குவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT