தான் நடித்து வரும் தக்ஸ் ஆஃப் ஹிந்தொஸ்தான், கரடு முரடான படம் என அமிதாப்பச்சன் கூறியுள்ளார்.
1839ஆம் ஆண்டு வெளியான கன்ஃபெஷன்ஸ் ஆஃப் அ தக் என்ற நாவலை தழுவி எடுக்கப்படும் படம் தக்ஸ் ஆஃப் ஹிந்தொஸ்தான். 2018 தீபாவளி அன்று வெளியீடு திட்டமிடப்பட்டுள்ளது. யாஷ் ராஜ் த்யாரிக்கும் இந்தப் படத்தில் அமிதாப்பச்சனும், ஆமிர்கானும் முதல் முறையாக சேர்ந்து நடிக்கின்றனர்.
மேலும் இதில் காத்ரீனா கைஃப், ஃபாத்திமா சனா ஷேக் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். விஜய் கிருஷ்ண ஆச்சார்யா இயக்குகிறர்.
படத்தின் படப்பிடிப்பிலிருந்து வந்த அமிதாப், தனது ட்விட்டர் பக்கத்தில், "தக்ஸ் ஆஃப் ஹிந்தொஸ்தான் படப்பிடிப்பிலிருந்து திரும்பியிருக்கிறேன். கரடு முரடான படம். ஆனால் இப்படி உழைக்காமல் யார் பலனடையமுடியும்" என பதிவிட்டுள்ளார்.
அடுத்து அமிதாப் நடிப்பில் 102 நாட் அவுட் என்கிற படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து அமிதாப் பச்சன் ரிஷி கபூருடன் இணைந்து நடித்துள்ளார்.