'சென்னை எக்ஸ்பிரஸ்' படம் டிஷ் டிவி ஒளிபரப்பிலும் சாதனை படைத்திருக்கிறது.
ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்து வெளியானது 'சென்னை எக்ஸ்பிரஸ்'. இப்படம் இதற்கு முந்தைய அனைத்து படங்களின் வசூலையும் முறியடித்தது. முதல் வாரத்தில் 100 கோடி வசூலை அள்ளியது. சுமார் 200 கோடிக்கு மேல் வாரிக் குவித்து படக்குழுவினை உச்சத்துக்கு உயர்த்தியது.
படம் வெளியாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால், படத்தினை ( DTH ) டிஷ் டிவியில் ஒளிபரப்ப முடிவு செய்து, பார்க்க விரும்புவர்கள் முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதிலும், இதற்கு முந்தைய படங்களின் சாதனையை முறியடித்துள்ளது 'சென்னை எக்ஸ்பிரஸ்'.
“உலகளவில் சின்ன குழந்தைகள் முதல் பெரியவர் வரை பரிச்சயமானவர் ஷாருக்கான். டிஷ் டிவியில் இந்தளவிற்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
எங்களது வாடிக்கையாளர்களுக்கு மேலும் பல பெரிய பட்ஜெட் படங்களை சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தரவேண்டும் “ என்று டிஷ் டிவியின் ஷாலில் கபூர் தெரிவித்துள்ளார்.