முன்னணி நடிகை ராணி முகர்ஜிக்கும், தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவிற்கும் பிப்ரவரி 10ம் தேதி திருமணம் நடைபெறவிருக்கிறது.
35 வயதாகும் ராணி முகர்ஜி இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாவார். இந்தியில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும், தமிழில் கமல்ஹாசனுடன் 'ஹே ராம்' படத்திலும் நடித்திருக்கிறார்.
மறைந்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் யாஷ் சோப்ரா மகன் ஆதித்யா சோப்ராவும், ராணி முகர்ஜியும் காதலிக்கிறார்கள் என்றும், இருவரும் ரகசியம் திருமணம் செய்துக் கொண்டார்கள் என்றும் செய்திகள் வெளிவந்தன. ஆனால் அச்செய்தியினை இருவருமே மறுத்தார்கள். நாங்கள் நண்பர்கள் மட்டுமே, காதலிக்கவில்லை என்று கூறினார்கள்.
தற்போது, ராணி முகர்ஜி - ஆதித்யா சோப்ரா இருவருமே தங்களைப் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள். இருவரும் பிப்ரவரி 10ம் தேதி திருமணம் செய்துக் கொள்ள திட்டமிட்டு இருக்கிறார்களாம். ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் மாளிகையில் திருமணம் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இத்திருமணம் பற்றிய செய்தியினை இருவரும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.