பாலிவுட்

இந்தியில் பாகுபலி கதாசிரியர் எழுத்தில் உருவாகிறது முதல்வன் 2

ஸ்கிரீனன்

'பாகுபலி' கதாசிரியர் விஜயேந்திர பிரசாத்எழுத்தில் இந்தியில் 'நாயக்' படத்தின் 2-ம் பாகம் உருவாகவுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன், மனிஷா கொய்ராலா, ரகுவரன், விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'முதல்வன்'. 1999ம் ஆண்டு வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் இந்தி ரீமேக்கில் அனில் கபூர் நடிக்க 'நாயக்' என்ற பெயரில் ஷங்கரே இயக்கினார். இந்தியில் இப்படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் தற்போது 'முதல்வன்' படத்தின் 2-ம் பாகத்திற்கான கதையை விஜயேந்திர பிரசாத் எழுதி வருகிறார். ’நான் ஈ’, ’மகதீரா’, ’பாகுபலி’, ’பஜ்ரங்கி பைஜான்’ உள்ளிட்ட பல வரவேற்பு பெற்ற படங்களுக்கு கதை எழுதியவர் விஜயேந்திர பிரசாத் என்பது குறிப்பிடத்தக்கது.’முதல்வன்’ 2-ம் பாகத்தின் கதையை இன்னும் 3 மாதங்களில் முடிக்க திட்டமிட்டு இருக்கிறார் விஜயேந்திர பிரசாத்.

'முதல்வன்' படத்தின் ரீமேக் உரிமையை ஏ.எம்.ரத்னத்திடம் இருந்து கைப்பற்றி இருக்கிறார் தீபக் முகுட். ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து ’நாயக் 2’ என்ற பெயரில் இப்படம் உருவாக இருக்கிறது. விஜயேந்திர பிரசாத் முழுமையாக கதை எழுதி முடித்தவுடன் நடிகர் மற்றும் இயக்குநர் உள்ளிட்ட விஷயங்கள் முடிவு செய்யப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT