பாலிவுட்

சென்னை எஸ்க்பிரஸை முந்துமா பேஷ்ரம்?

செய்திப்பிரிவு

ஷாருக்கான் சாதனையை ரன்பீர் கபூர் முறியடித்து விடுவார் என்கிறது பாலிவுட்.

ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'சென்னை எக்ஸ்பிரஸ்' இந்தியாவில் சுமார் 3500 தியேட்டர்களிலும், வெளிநாட்டில் 700 தியேட்டர்களிலும் வெளியானது. இதுவரை எந்தவொரு இந்தி படமும் இத்தனை தியேட்டர்களில் வெளியானதில்லை.

தற்போது ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியாக இருக்கும் 'பேஷ்ரம்' இச்சாதனையை முறியடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் பணியாற்றி வருகிறார்கள்.

சல்மான்கான் நடித்த 'டபாங்' படத்தின் மூலம் முன்னணி இயக்குநரான அபிநவ் கஷ்யாப் இயக்கிருப்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

'பேஷ்ரம்' விநியோக உரிமையை வாங்கியிருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் உத்பல் ஆச்சர்யா “ 'பேஷ்ரம்' படத்தினை இந்தியாவில் மட்டும் 3600க்கும் அதிகமான திரையரங்கில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம்.

4000 திரையரங்கில் தான் வெளியிட தீர்மானித்தோம். ஆனால் பவன் கல்யாண் நடித்து வெளியாகியிருக்கும் 'Attarintiki Daredi' வரவேற்பை பெற்றிருப்பதால் தான் திரையரங்குகளை குறைத்திருக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

அதிக தியேட்டர்கள்.. அதிக லாபம்!

SCROLL FOR NEXT