ராம் கோபால் வர்மா இயக்கியுள்ள 'சர்க்கார் 3' படத்துக்காக பக்திப் பாடலைப் பாடியுள்ளார் அமிதாப் பச்சன்.
இதுகுறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமிதாப், ''சர்க்கார் 3 படத்துக்காக கணபதி பூஜை நடந்தபோது கண்பதி துதிப் பாடலைப் பாடியுள்ளேன். அந்தப் பாடல் சக்தி வாய்ந்ததாகவும், தெய்வீகமாகவும் இருக்கும்'' என்று கூறியுள்ளார்.
ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் மூன்றாவது பாகமாக வெளிவரும் படம் 'சர்க்கார் 3'. அரசியல் த்ரில்லரை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அமித் சாத், யாமி கவுதம், ஜாக்கி ஷெராஃப் மற்றும் மனோஜ் பாஜ்பேயி ஆகியோர் நடிக்கின்றனர்.
இது தொடர்பான காணொலியைக் காண:
</p>