பாலிவுட்

கோல்மால் 4 மூலம் இந்தியில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் தமன்

ஸ்கிரீனன்

ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் உருவாகும் 'கோல்மால் 4' படத்தின் மூலமாக இந்தியில் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார் தமன்.

'ஈரம்', 'காஞ்சனா', 'ஒஸ்தி', 'மெளனகுரு' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவர் தமன். தமிழிலை விட தெலுங்கில் முன்னணி நாயகர்கள் நடிக்கும் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

தமிழ் - தெலுங்கு இரண்டிலும் பணியாற்றி வந்தாலும், இந்தியில் அறிமுகமாகமால் இருந்தார். தற்போது ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் உருவாகும் 'கோல்மால் 4' மூலமாக இந்தியில் அறிமுகமாகவுள்ளார்.

அஜய் தேவ்கான், ப்ரணீதா சோப்ரா, தபு, நீல் நிதின் முகேஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'கோல்மால் 4' படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அஜய் தேவ்கான் மற்றும் ரோஹித் ஷெட்டி இணைந்து தயாரித்து வரும் படத்தை ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது.

'கோல்மால் 4' படத்துக்கு இசையமைக்கும் பணிகளைத் தொடங்கியுள்ள தமன், தமிழிலும் விக்ரம் - விஜய் சந்தர் இணைந்து பணியாற்றி வரும் 'ஸ்கெட்ச்' படத்தின் இசைப்பணிகளையும் கவனித்து வருகிறார்.

SCROLL FOR NEXT