பாலிவுட்டில் வயதான நடிகைகளுக்கு வாய்ப்பு வழங்கப்படுவது இல்லை என்று நடிகை ஷர்மிளா தாகூர் வருத்தம் தெரிவித்தார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியது: பாலிவுட் படங்களில் அமிதாப் பச்சன், அனுபம் கெர், நஸ்ரூதீன் ஷா ஆகியோர் இன்றும் நடித்து வருகின்றனர்.
அவர்கள் வயது நிரம்பிய நடிகைகள் எங்கோ காணாமல் போய்விட்டனர். அவர்களுக்கு பாலிவுட் திரை யுலகம் சிறிய வாய்ப்பைகூட வழங்கவில்லை.
பெரும்பாலும் நடிகர்களுக்காக மட்டுமே திரைக்கதை உருவாக்கப்படுகிறது. நடிகைக ளுக்காக யாரும் திரைக்கதை எழுதுவது இல்லை.
பெரும்பாலான பாலிவுட் படங்களில் நடிகைகள் அலங்காரப் பொருளாக மட்டுமே வந்து செல்கின்றனர். எனினும் சில பிராந்திய மொழிகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் அவ்வப்போது வெளிவருகின்றன.
பாலிவுட்டை பொறுத்த வரையில் “அழகுக்கு” மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றார்.