சீக்கிய மனித உரிமை அமைப்பு தொடர்ந்த மனித உரிமை மீறல் வழக்கில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
1984-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது, டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. அப்போது இந்திரா காந்தியின் குடும்ப நண்பரான அமிதாப் பச்சன் கலவரத்தை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த சம்பவம் நடந்து முடிந்து 30 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தற்போது அமிதாப் பச்சனுக்கு எதிராக லாஸ்ஏஞ்செல்ஸ் நகர நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.கலவரத்தில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் டெல்லியைச் சேர்ந்த பாபுசிங் துகியா, கலிபோர்னியாவில் வசிக்கும் மொஹந்தர் சிங் மற்றும் நியூயார்க் நகரில் இயங்கிவரும் ‘சீக் ஃபார் ஜஸ்டிஸ்’ என்ற அமைப்பு சார்பில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் சம்மன் கிடைத்த 21 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என அமிதாப் பச்சனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.