பாலிவுட்

மகளை நடிக்க வைப்பதில் ஐஸ்வர்யா - அபிஷேக் முரண்பாடு

செய்திப்பிரிவு

நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது கணவர் அபிஷேக் இடையே பெரிய அளவில் கருத்து வேறுபாடு வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மகள் ஆராத்யாவை நடிக்க வைக்க அபிஷேக் விரும்புவதாகவும், அதற்கு ஐஸ்வர்யா முட்டுக்கட்டை போடுவதால் இருவரது குடும்ப வாழ்க்கையில் பெரிய அளவில் மோதல் வெடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பான செய்தியை அமருஜலா என்ற இந்தி இணையதளம் வெளியிட்டுள்ளது. மகள் ஆராத்யாவை இந்தி திரை யுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்வதன் மூலம், வருங்காலத்தில் புகழ்பெற்ற கதாநாயகியாக உருவாக்க முடியும் என அபிஷேக் நம்புவதாக வும், ஆனால் அதற்கு ஐஸ்வர்யா ராய் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் இருவரது குடும்ப வாழ்க்கையிலும் மிகப் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அதே வேளையில், அனுராக் காஷ்யப் தயாரிப்பில் குலாப் ஜாமூன் என்ற திரைப் படத்தில் ஐஸ்வர்யாவும், அபிஷேக் கும் ஒன்றாக நடிக்கவுள்ளனர். ஆனால் இந்த தகவலை காஷ்யப்பும், அபிஷேக் பச்சனும் உறுதி செய்யவில்லை.

SCROLL FOR NEXT