பாலிவுட்

பிரதமர் மோடியுடன் நடிகர் அக்‌ஷய் குமார் சந்திப்பு

பிடிஐ

பிரதமர் நரேந்திர மோடியை பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் இன்று (புதன்கிழமை) சந்தித்தார். டாய்லட்: ஏக் பிரேம் கதா (Toilet: Ek Prem Katha ) என்ற படத்தில் நடித்துள்ளார் அக்‌ஷ்ய குமார்.

இத்திரைப்படம் தூய்மை இந்தியா திட்டத்தை பின்புலமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ நாராயண சிங் இப்படத்தை இயக்கியுள்ளார்.

விரைவில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இன்று பிரதமர் மோடியை சந்தித்தார் அக்‌ஷய் குமார். தான் நடித்துவரும் திரைப்படம் குறித்து பிரதமர் மோடியிடம் அவர் எடுத்துரைத்துள்ளார்.

இச்சந்திப்பு தொடர்பாக அக்‌ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தேன். எனது திரைப்படம் டாய்லட்: ஏக் பிரேம் கதா (Toilet: Ek Prem Katha ) குறித்து அவரிடம் விவரிக்க வாய்ப்பு கிடைத்தது. படத்தின் தலைப்பு அவர் முகத்தில் புன்முறுவலை தோற்றுவித்தது. அது இந்த நாளில் எனக்குக் கிடைத்த வெற்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT