பாலிவுட்

மேக்கப் இல்லாத அனுஷ்கா சர்மா

செய்திப்பிரிவு

வருண் தவான் - அனுஷ்கா சர்மா ஆகியோர் நடிப்பில் செப்டம்பரில் வெளிவரவிருக்கும் ’சுய் தாகா’ திரைப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் தற்போது நடந்து வருகின்றன. தேசிய விருது பெற்று இயக்குநர்  சரத் கட்டாரியா இப்படத்தை இயக்கியுள்ளார். 

ஏழைப் பெண்ணான அனுஷ்கா சர்மா, தன் சொந்த தொழில் மூலமாக முன்னேறுகிறார் என்ற கருத்தில் படம் உருவாகியுள்ளது. நடிகர் வருண் தவான் மவுஜி என்ற கதாபாத்திரத்திலும், அனுஷ்கா அவரது மனைவியாக மம்தா என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

இதுபற்றி அனுஷ்கா சர்மா கூறும்போது, ‘‘படத்தின் டிரைலர் காட்சிகளை சமீபத்தில் பார்த்தேன். என் கதாபாத்திரத்தின் தோற்றம் மிக அருமையாக இருக்கிறது. இதற்கு காரணம் ஆடை வடிவமைப்பாளர் தர்சன் மற்றும் மேக்கப் கலைஞர்கள்தான். மேக்கப் இல்லாமல் நடித்துள்ளேன். வெறும் 20 நிமிடங்களில் படப்பிடிப்புக்கு தயாரானது குறிப்பிடத்தக்கது’’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT