நந்திதாதாஸ் இயக்கத்தில் நவாஸுதீன் சித்திக் நடித்த ‘மன்ட்டோ’ திரைப்படம், ரசிகர்கள், விமர்சகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்தியா கண்ட மகத்தான எழுத்தாளர்களில் ஒருவரான மன்ட்டோ படைத்த பாத்திரங்களை இதுவரை அவருடைய எழுத்து வழியே தரிசித்தவர்கள் இந்தப் படத்தில் மன்ட்டோவையே ஒரு பாத்திரமாகத் திரையில் பார்க்கும்போது நெகிழ்ந்துபோகிறார்கள். மன்ட்டோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் ராமாநுஜம் மொழிபெயர்ப்பில் தமிழில் வெளிவந்திருக்கின்றன. ஏற்கெனவே பல பதிப்புகளைக் கண்டிருக்கும் ‘மன்ட்டோ படைப்புகள்’ நூலை ‘பாரதி புத்தகாலயம்’ மீண்டும் பதிப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது!