பாலிவுட்

அம்ரீஷ் பூரி பிறந்த தினம்: டூடுல் வெளியிட்ட கூகுள்

செய்திப்பிரிவு

பிரபல இந்தி திரைப்பட வில்லன் அம்ரீஷ் பூரி பிறந்த நாளையொட்டி கூகுள் டூடுல் வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் 1932 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி பிறந்த அம்ரீஷ் பூரி இன்று தனது 87-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். 

இன்றும் பாலிவுட் திரையுலகின் சிறந்த வில்லன் என்று நினைவுகூரப்படும் அம்ரீஷ் பூரியின் பிறந்த நாளுக்கு கூகுள் டூடுல் வெளியிட்டு கவுரவித்துள்ளது.

சுமார் 350க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ள அம்ரீஷ் ஆங்கிலப் படங்களிலும், இந்திய மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த 2005-ம் ஆண்டு ஜனவரி மாதம் அம்ரீஷ் பூரி மரணம் அடைந்தார்.

SCROLL FOR NEXT