யுனிசெஃப் அமைப்பின் டானி கே மனிதாபிமான விருதுக்கு நடிகை பிரியங்கா சோப்ரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த விருது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரியங்கா, "நெகிழ்ச்சியாக உணர்கிறேன். டானி கே மனிதாபிமான விருது கொடுத்து என்னை கவுரவித்த யுனிசெஃப் அமைப்புக்கு நன்றி. யுனிசெஃப்பின் சார்பாக குழந்தைகளுக்கு நான் செய்யும் சேவை எனக்கு எல்லாவற்றையும் விட முக்கியமானது.
ஒவ்வொரு குழந்தையின் அமைதியான எதிர்காலத்துக்காக, சுதந்திரத்துக்காக, கல்வி உரிமைக்காக (இந்த விருது போய் சேரட்டும்)" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த விருது வழங்கும் விழா டிசம்பர் 3-ஆம் தேதி நியூயார்க் நகரில் நடைபெறுகிறது.
2006-ஆம் ஆண்டிலிருந்து யுனிசெஃப் அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருகிறார் பிரியங்கா. 2010 மற்றும் ‘16 ஆண்டுகளில் யுனிசெஃப் அமைப்பின் குழந்தைகள் உரிமைக்கான நல்லெண்ண தூதராக பிரியங்கா சோப்ரா தேர்ந்தெடுக்கப்பட்டார். சுற்றுச்சூழல், ஆரோக்கியம், கல்வி, பெண்கள் உரிமை உள்ளிட்ட விஷயங்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். மேலும் பாலின சமத்துவம், பெண்ணியம் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார்.