பாலிவுட்

எல்லாவற்றையும் கடந்து செல்லுங்கள்; எதுவும் இறுதியானது அல்ல: இர்ஃபான் கான் உருக்கமான பதிவு

செய்திப்பிரிவு

 நியூரோ எண்டாக்ரின் ட்யூமர் எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டு வெளிநாட்டில் சிகிச்சை எடுத்துவரும் பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

'தி லஞ்ச் பாக்ஸ்', 'லைஃப் ஆஃப் பை' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து சர்வதேச அளவில் புகழை எட்டியவர் இர்ஃபான் கான். இவர் தான் நியூரோ எண்டாக்ரின் ட்யூமர் எனப்படும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக, கடந்த வாரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இர்ஃபான் கான் தற்போது லண்டனில் சிகிச்சை எடுத்து வருகிறார்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில், ஆஸ்திரிய கவிஞரும் எழுத்தாளருமான ரெய்னர் மரியா ரில்கே என்பவரின் உருக்கமான மேற்கோள் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அப்பதிவில், "உங்களுக்கு எல்லாமும் நடக்கும். அழகானவையும் பயங்கரமானவையும். நீங்கள் அவற்றை கடந்து செல்லுங்கள். எந்தவொரு உணர்வும் இறுதியானது அல்ல. உங்களை நீங்கள் இழக்கக்கூடாது. வாழ்க்கையின் தீவிரத்தைப் பொறுத்து அதனை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். உங்களது கையை என்னிடம் கொடுங்கள்", என இர்ஃபான் கான் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT